திறம றிந்திதன் தெய்வ சக்தியைத் தேசம் முற்றிலும் ஓதினால் உரம்மி குந்திடும் பயிர்செ ழித்திடும் உணவி லாக்குறை ஏதினி? 2 கடவுள் ஆணையை மீறு கின்றநம் கபட நாடக வாழ்வினால் அடவி தந்திடும் பகைமை முற்றிலும்; அழிவு செய்துள தாழ்வினால் கடுமை யாகிய பஞ்சம் மிஞ்சிடக் காலம் மாறின பருவமும் மடமை விட்டிடக் கடமை கண்டினி மரம் வளர்ப்பது கருதுவோம். 3 நிழல்கொ டுத்திடும் மரம னைத்தையும் விறகெ ரித்துள நிந்தையால் தழல்பு குந்துநம் சமையல் செய்திடச் சாண முற்றிலும் வெந்ததால் தழையி லாமலும் எருவி லாமலும் தகுதி யற்றுள மண்ணிலே விழல்மு ளைக்கவும் சார மில்லைபின் விளைவு எப்படி எண்ணலாம்? 4 வனமி ருந்திடில் மழைபொ ழிந்திடும் வான நீதியின் சத்தியம் வனம ழிந்தது மழைகு றைந்தது வாய்மை கண்டனம் இத்தினம் மனமு வந்தினி நாட்டி லெங்கணும் மரம டர்ந்திட செய்குவோம். தினமி குந்திடும் தானி யக்குறை தீர்ந்தி டும்படி உய்குவோம். 5 |