பசும ரங்களில் தெய்வ முண்டெனப் பழைய முன்னவர் போற்றினார் இசைமி குந்திட ஆயுள் நீண்டிட இன்ப இல்லறம் ஆற்றினார் வசையொ ழிந்திட நாமும் அப்படி வனம ரங்களை எண்ணுவோம் திசைய னைத்திலும் புகழ்ச்சி றந்திடத் தீர வாழ்க்கையும் பண்ணுவோம். 6 வாழ்க இத்திரு வாரம் முழுவதும் மரம்வ ளர்ந்திட நட்டவர் வாழ்க அம்மரம் வேர்வ லுக்கிற வரையில் நீர்தினம் விட்டவர் வாழ்க நம்முடை நாட்டி லெங்கணும் வான ளாவிடும் சோலைகள் வாழ்க சத்திய சாந்த நல்வழி வந்த இந்தச் சுதந்தரம். |