சீருற்ற செல்வம் போனால் சேர்ந்தசுற் றந்தார் எங்கே? நேர்வுற்ற ஞானம் பெற்றால் தீர்ந்திடும் உலக மாயை. 10
செருக்கடை யாதே உன்னைச் சேர்ந்துள சுற்றத் தாரின் பெருக்கமும் பணமும் தேகப் பெலனுடன் மேக மெல்லாம் பொருக்கென மறையும்; வாழ்வு பொய்மானின் வேட்டை போலும்; சுருக்கென மடநெஞ் சேநீ மெய்ஞ்ஞான மார்க்கம் சூழ்வாய். 11 காலையும் சந்தி யென்றும் கடும்பகல் உச்சி யென்றும் மாலையும் மறைதல் என்றும் மதிமீனின் இரவாம் என்றும் கோலமாம் கோடை என்றும் குளிர்என்றும் கால தேவி வேலையால் ஆயுள் தேய்ந்தும் தணிந்திலை ஆசை வேட்கை. 12 புத்திகெட்ட மூடா! உன்றன் புகலிடம் நாதன் அன்றோ! சொத்துசுகம் மனைவி சாரம் சூழ்ந்திட இதுவோ காலம்? செத்துவிடும் பொழுதி லேனும் அறத்தவர் சேர்க்கை கொண்டால் தத்துகடல் பிறவி நீந்தத் தக்கதோர் நாவாய் ஆமே! 13 |