புலவர் சிவ. கன்னியப்பன் 247

கங்கையில் குளித்திட் டாலும்,
              கதிபெற விரும்பிச் சேது
       கடலிடை முழுகி னாலும்,
              கருதிய படிக்கு வேறு
எங்குப்போய் எந்த நோன்பை
              எப்படி தோற்றிட் டாலும்
       என்னென்ன தாளம் ஈந்து
              புண்ணியம் எய்தி னாலும்
துங்கமாம் ஞானம் இன்றி
              விடுதலை வழிதோன் றாது;
       தூய்மையாம் பத்தி ஒன்றே
              துலங்கிடும் ஞான மூட்டும்
இங்கிதை நன்கு தேர்வாய்;
              இசைந்திடும் மார்க்க மெல்லாம்
       இவ்வொன்றை அன்றி வேறு,
              எவ்வொன்றும் சொன்ன தில்லை.       17

ஆசையாம் ராக மோகம்
              அழித்தலே சிறந்த போகம்;
       அமளிபுல் தரை; மெய்போர்த்த
              ஆவது மான்தோல் கோயில்
மாசிலா மண்ட பம்தான்
              மனக்குறை மாற்றும் இல்லம்
       மாயத்தைத் தீர்க்க அங்கோர்
              மரத்தடி விடுதி யாகும்;
தேசுலாம் செல்வத் தாலும்
              தேடரும் சுகம்யா தென்றால்
       தீர்க்கமாய் ‘வேண்டாம்‘ என்னும்
              திடமனம்; மகனே! தேர்வாய்
நீசமாம் ராகம் என்னும்
              மனவிகா ரத்தை நீக்கின்
       நிலவிடும் சுகத்தின் இன்பம்
              நிகரற்ற இன்ப மாகும்.       18