அம்மனம் சுவைத்த இன்ப ஆசையின் சபலம் தங்கும்; மெய்மையன் பரமாத் மாவை மேவினால் அதுவும் நீ்ங்கும். 6 குந்தியின் மகனே! கேளாய்; குறைவற முயலும் யோக சிந்தனை யுடைய நல்ல தவசியின் திடத்தைக் கூட இந்திரி யங்கள் வேகம் தம்முடன் இழுத்துச் செல்லும்; நிந்தனை சேரப் புத்தி நிலைதடு மாற நேரும் 7 அப்படிப் பட்ட அந்தப் பொறிகளை அடக்கி வைத்துத் தப்பற யோகம் தன்னில் தன்மனம் ஊன்றி நிற்பாய். எம்பொருள் எதையும் விட்டிங் கென்னையே பரனாய்க் கொண்டு வெப்புறும் புலனை வென்றோன் மேவுவன் நிலைத்த ஞானம். 8
மனிதர்கள் விஷயம் தம்மை மனத்தினில் மருவும் போது பனிதரும் ஆசை தோன்றிப் பற்றுகள் பற்றிக் கொள்ளும். வினைதரும் பற்றுண் டாகி விளைத்திடும் மோகந்தானே. சிவமெனும் தீமை தோன்றிச் சிந்தனை கெட்டுப் போகும். 9 |