சினமது வந்த பின்னர்ச் சிந்தனை மயக்கம் கொள்ளும்; மனமது மயங்கும் போதில் எண்ணத்தில் மாசுண் டாகும்; நினைவது மாசு பட்டால் நிச்சயம் புத்தி நாசம்; அனையதாய் அறிவு கெட்டால் அதன்பின்பு அழிவே திண்ணம். 10 அருப்புடைப் புலன்கள் தம்மை அடக்கிய அறிஞன் என்போன் இருப்புள உலகத் தோடே இணங்கிஊ டாடினாலும் விருப்பொடு வெறுப்பு மின்றி விஷயங்கள் நுகர்வோ னாகத் திரிப்பிலன் ஆகி உள்ளத் தெளிவுடன் அமைதி சேர்வான். 11 தெளிவுடன் அமைதி சேர்ந்த சித்தத்தில் ஒளிஉண் டாகும் ஒளிபெறும் போது புத்தி விரைவினில் உறுதி கொள்ளும்; அளிதரும் சாந்தி பெற்ற அறிவுதான் நிலைப்ப தாகும். இளிதரும் துன்பம் என்ப திவனுக்கிங் இல்லை யாகும். 12 யோகமில் லாத பேர்க்கே உறுதியாம் புத்தி யில்லை; ஆகவே அவர்கள் ஆத்ம சிந்தனை அடைய மாட்டார். |