256நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சேகெனும் அந்த ஆத்ம
       சிந்தனை இல்லை யானால்
பாகெனும் சாந்தம் இல்லை;
       பகர்ந்திட இன்பம் ஏது?       13

இந்திரி யத்தின் வேக
       இழுப்பினில் சிக்கிக் கொண்டு
சிந்தனை விஷயத் தோடு
       பின்பற்றிச் செல்லு மாயின்
அந்தரக் கடலில் காற்றில்
       அலைபடும் படகே போல
மைந்தரின் அறிவு மங்கி
       மலைத்திடும் ஆசை மோத.       14

ஆதலால் வலிய தோளாய்!
       அத்தகை விஷயம் தம்மைக்
காதலால் தொடரா வண்ணம்
       பொறிகளைக் கட்டிக் காத்து
வாதனைக் கிடமில் லாமல்
       வசமாக்கி வைக்கத் தக்க
சாதனை உடையோன் புத்தி
       சலனமில் லாத தாகும்.       15

மற்றுள உயிர்கள் தூங்கும்
       மடமையின் இரவே யாகும்.
சுற்றுள யோகி ஞானக்
       கண்ணுறங் காத நேரம்;
உற்றுள உலகத் தோர்கள்
       உழல்கின்ற பகற்கா லத்தை
நற்றவ யோகி சாந்த
       நள்ளிர வாகக் கொள்வான்.       16