ஆறுகள் பாய்ந்து தண்ணீர் அடிக்கடிப் புகுந்திட்டாலும் மாறுகொள் ளாது நிற்கும் மாபெரும் கடலே போல வீறுகொள் காமம் பாய்ந்தும் விருப்புறா நிலையே சாந்தி; சாறுற விருப்ப முற்றோன் காந்தியை அடைய மாட்டான். 17 இச்சையை ஒழித்தே எல்லா இன்பமும் துறந்தோ னாகி எச்சரிப் போடு காத்திங் கிடைதடு மாறி டாமல் நச்சிடும் மமதைக் கூட்டும் ‘நான்என‘ தென்ப தற்றோன் நிச்சயம் பரம சாந்த நிலையினை அடைந்தோன் ஆவான். 18 அந்நிலை அதுவே ப்ரம்ம ஆனந்த நிலைமை யாகும்; இந்நிலை பெற்றோன் பின்னர் எதிலுமே மயங்க மாட்டான்; பொய்நிலை யான தேகம் போய்விடும் போது கூடச் செந்நிலை மாறி டாமல் முத்தியைச் சேர்வான் திண்ணம். 19 குறிப்புரை:- இச்சை - விருப்பம்; திண்ணம் - உறுதி; முத்தி - மோட்சம்; தேகம் - உடல். 9 நா.க.பா. பூ.வெ. எ. 489 |