புலவர் சிவ. கன்னியப்பன் 259

ஜெர்மனி சண்டை செய்திடும் போதும்
தர்மம் இதுவெனத் தளரா துழைத்தேன்.
ஆனஎன் தேகம் அசதியுற் றிருந்தும்
சேனையும் பணமும் சேர்த்துக் கொடுத்தேன்
சண்டையின் பின்பு தருமம் தழைக்கும்.       30

அண்டிய எங்கள் ஆசிய நாடும்
மாநிலத் துள்ள மற்றநா டுகளெனத்
தானிமிர்ந் துயரத் தயவுசெய் வாரென
நம்பியே நானும் நாளும் உழைத்து
வெம்பினேன் எண்ணமும் வீனாய்ப் போனதே!       35

அடிமேல் அடியென அஞ்சியே பதைத்திட
இடிமேல் இடிவிழ இற்றது நெஞ்சமும்
முதலடி ‘ரௌலட்‘ சட்ட மூலமாய்
முதுகினில் விழுந்தது சுதந்தரம் முறியப்
பதைத்துநா னெழுந்து பலவிதத் தாலும்.       40

அதைத்தடுப் பதற்கே அலைந்திடும் நாளில்
தயங்கிய என்மனம் தைரிய மடையுமுன்
பயங்கர மாகிய பஞ்சாப் படுகொலை!
கூர்மையாம் இடியது மானமுங் குறைய
மார்பினில் விழவே மயங்கினன் ஐயோ!       45

இந்திய முசல்மான் மக்களுக் கென்று
மந்திரி யுரைத்த உறுதியை மறந்தும்
அன்னவர் குருவின் ஆதி பீடமாம்
மன்னிய கிலாபாத் மதவிஷ யத்திலும்
சொன்னதம் வாக்கினைச் சோரவிட் டார்கள்.       50

எண்ணமும் இல்லை யென்பதை யுணர்ந்தேன்
இத்தனைக் கொடுமைகள் இழைத்தனர் தெரிந்தும்
சித்தமும் அவர்க்குச் சீக்கிரம் திரும்புமென்
றாசையே கொண்டு அடக்கினேன் துக்கமே.
ஏசிய என்னை எதிர்த்தவ ராகி       55