262நாமக்கல் கவிஞர் பாடல்கள்

நடைப்பிணம் போல நாள்கழிப் பதனைத்
தடைசொல யார்க்கும் தைரியம் வருமோ?
பட்டணக் கரையில் பகட்டியே யலைந்து
சட்டவட் டம்பல ஜம்பமாய்ப் பேசி
வீடுகள் கட்டியே விளக்குகள் ஏற்றிப்       120

பாடுப டாமலே பசப்பிய வாழ்த்து
நாட்டுப் புறங்களில் நலிந்திடும் ஏழைகள்
பாட்டைப் பிடுங்கியோ பிறருடன் கூடிப்
பங்குகொண் டுண்ணும் பாவமாம் வாழ்க்கையைத்
தகர்த்திட எண்ணார் தரகராய் வாழ்வார்.       125

ஏழையின் பணத்தை எளிதினிற் பறிக்கவே
ஆளுமிந் நாட்டின் ஆட்சியின் முறைமை
உதவியாய் நிற்பதென் றுணரார் அவரும்
உதவியாய் நிற்பதால் உண்மையை அறியார்.
வித்தைகள் ஜாலமும் வேணது செய்தே.       130

எத்தனை கணக்குகள் எடுத்துரைத் தாலும்
உண்மையாம் இதனை ஒளித்திட முடியுமோ?
திண்மையாய் நானும் செப்புவ துண்டாம்.
உலகக் கதைகளில் உவமையொன் றில்லாப்
பலமிகு மிகப்பெரும் பாவத் திற்கே.       135

ஈசனென் றொருவன் இருப்பதும் உண்மையேல்
இத்தரை யெல்லாம் இயம்பினேன் அறிய,
கடமையை யுணரும் ஒவ்வொரு குடியும்
திடமுடன் கொண்டு செய்திட வென்றும்
சட்டப் படிக்குத் தவறெனத் தெரிந்தும்       140

திட்டமாய் நானும் தெரிந்தே செய்தேன்
ஆகையால் துரையே! அறைகுவன் முடிவாய்
ஆகிய இந்த அரசியல் முறைமை
சரிவல வென்றும் சத்தியத் தில்நான்
நிரப ராதியே என்பதும் நினைத்தால்       145