சிவபிரான் துதி ஆலமுண் டாலும் அசையா நான்பர கால னடிகுண சீலனடி பாலை முனிந்த பணிமொழி யாள்பதி பாலகங் காதரன் பாடுங்கடி. 4 கோபாலன் துதி தீதுசெய் வேந்தரைச் சீர்திருத் தம்செய்யத் தூதுந டத்திடும் தூயனடி கோதில் கணத்தவன் கோகுலத் தில்வந்த கோபால கிருஷ்ணனைப் பாடுங்கடி. 5 வழிபடு கந்தன் துதி கந்தம லரொரு மேலவர்க்கும் ஞானக் கைப்பலம் காட்டிய கந்தனடி கந்தம ணக்கின்ற ஜோதிய டிபுகழ் காந்திய டிவெகு சாந்தனடி 6 தற்கால நிலைமை கிட்டுங்க டிமலர் கொட்டுங்க டிகையைத் தட்டுங்கடி கண்ணீர் சொட்டுங்கடி மட்டில் புகழ்கொண்ட இந்திய தேவியின் மாட்சிமை கெட்டதைக் கேளுங்கடி! 7 கெட்டோம டிகுடி கெட்டோம டிநாம் பட்டோம டிவெகு கஷ்டமடி முட்டத் தரித்திரம் கிட்டி முறைக்குது மூதேவி நம்மை முறைமை கொண்டாள். 8 கஞ்சியற் றோம்பழங் கந்தையற் றோம்குல வஞ்சிய ரேஎன்ன வஞ்சமடி கெஞ்சுகின் றோம்மிக அஞ்சுகின் றோம்என்ன காலம டிவந்த கோலமடி. 9 |