புலவர் சிவ. கன்னியப்பன் 27

கள்ளங் கபடமற்ற பாலன் - மேலே
       காதல் கொண்டஎன்னை ஞாலம்
எள்ளி ஏளனம்செய் தாலும் - நான்
       எதற்கும் அஞ்சிலன்எக் காலும்!       (முரு)8

முருகன் கந்தன்வடி வேலன் - ஞானத்
       திருக்கு கன்குமரன் சீலன்
சிறுகு ழந்தையா னாலும் - அன்னைத்
       திரும ணம்புரிவன் மேலும்!       (முரு)9

வேறு பெயரைச்சொன் னாலும் - சற்றும்
       விரும்ப மாட்டெனெந்த நாளும்!
நூறு பேசுவதை விட்டே - எனக்குத்
       துணைபுரி முருகனைக் கட்ட.       (முரு)10

14, எழிலுடைச் சோதி

உலகெலாம் காக்கும் ஒருதனிப் பொருளே!
உன்னருள் நோக்கி இன்னுமிங் குள்ளோம்.
இந்திய நாட்டை இந்தியர்க் கென்று
தந்தனை யிலையோ? தவறதில் உண்டோ?
காடும் மலைகளும் கனிதரும் சோலைகள்.       5

ஓடும் நதிகளும் உள்ளன எவையும்
இங்கே பிறந்தவர் எங்களுக் கிலையோ?
எங்கோ யாரோ வந்தவர் துய்க்கச்
சொந்த நாட்டினில் தோன்றிடும் செல்வம்
எந்த நாட்டிலோ எங்கோ போய்விடக்       10

கஞ்சியு மின்றிக் கந்தையும் இன்றி
அஞ்சிய வாழ்வின் அடிமையிற் கிடந்து
நொந்தனம் கொள்ளை நோய்களாற் செத்து
காட்டிடை வாழும் விலங்கினுங் கேடாய்க்
நாட்டிடை யிருந்தும் நலிந்தனம் ஐயோ!       15