புலவர் சிவ. கன்னியப்பன் 273

ராம னிருந்தது மிந்நா டேஅந்த
       பீம னிருந்தது மிந்நாடே.
சோம னொடுபுகழ் சூரியன் மரபும்
       ஜோதி மொழிந்தது மிந்நாடே.       66

கண்ணன் பிறந்தது மிந்நா டேகொடை
       கர்ண னிருந்தது மிந்நாடே
அண்ண லடியரிச் சந்திர னும்மவன்
       அன்புடைத் தேவியு மிந்நாடே.       67

முன்னுமில் லைஇனிப் பின்னுமில் லையென
       முந்திய நீதியின் மூவேந்தர்
மன்ன ரடிசேர சோழரும் பாண்டியர்
       மாட்சிமை கொண்டது மிந்நாடே.       68

ஏட்டி லடக்க முடியா துமனம்
       எண்ணி எழுதவும் போதாது;
பாட்டி லடக்க முடியா தபுகழ்ப்
       பாவையும் மிந்தக் கதியானாள்.       69

இனி நாம் செய்ய வேண்டுவதென்ன?

போனது போகட்டும் கண்மணியே! இனி
       யாகிலும் புத்தியு டனிருப்போம்.
மாநிலத் தாயை வணங்கிநின் றாலினி
       மாநிலத் தேமிக நாமுயர்வோம்.       70

இந்தியத் தேவியைப் பூஜைசெய் யுமந்த
       இந்திய ரெல்லொரும் ஒன்றடியே
எந்த மதத்திற்கும் எந்தக் குலத்திற்கும்
       சொந்தம டியவள் தொந்தமடி!       71

ஏழையு மெங்களுக் கண்ணனடி செல்வப்
       பேழையு மெங்களின் தம்பியடி
கோழையு மெங்கள் குலத்த னடிகுடி
       காரனுங் கூடப் பிறந்தவனே.       72