அந்தத் தேசத்தின் எல்லையும் சிறப்பும் வெள்ளி மலையும் வடக்கா கவிரி வெற்புடைச் சிங்களம் தெற்காகப் பள்ளக் கடலடி வங்களம் குண பாரிச மேற்கி லரபிக் கடல். 59 பரந்து கிடக்கின்ற தேசமடி எம்மைப் பாலிக்கும் இந்தியத் தேவியடி! சிறந்து விளங்கிய தேசம டிஅவள் சீரும் சிறப்பையும் கேளுங்கடி. 60 வேத முதித்தது மிந்நாடே அருள் வேதிகை நின்றது மிந்நாடே. போத முதித்தது மிந்நாடே மிக்க புண்ணிய பூமியென் றாடுங்கடி! 61 ஞான முதித்தது மிந்நா டேஅருள் ஞானிகள் நின்றது மிந்நாடே. மோன மறிந்த முதல்நா டேவெகு முத்த ரிருந்தது மிந்நாடே. 62 புத்தர் பிறந்தது மிந்நா டேஅவர் போதம் வளர்த்தது மிந்நாடே. சித்த ரிருந்தது மிந்நா டேவெகு சித்திகள் பெற்றது மிந்நாடே. 63 சீதை பிறந்தது மிந்நா டேஅவள் சீர்த்தி விளங்கிய திந்நாடே. கீதை பிறந்தது மிந்நா டேவெகு கீர்த்திகள் பெற்றது மிந்நாடே. 64 சீருடை யத்தம யந்தியோ டுபுகழ் சிலம்புடைக் கண்ணகி தேவியையும் பேருடை யாள்சா வித்திரி தேவியைப் பெற்று வளர்த்தது மிந்நாடே. 65 |