எண்ணிக்கை யற்ற அரசர டிஇந்த ஏந்திழைச் செல்வத்தில் ஆசைகொண்டார் எண்ணிக்கை யற்ற பகைவரடி அந்த ஏந்திழை யென்று நம்மைப் புரந்தாள். 52 அத்தனை கஷ்டமும் தான்சகித் துநம்மை ஆதரித் திருந்த தேவியின்ன மத்தரைப் போல மறந்தத னாலிந்த மாநிலத் தேமிக ஈனமுற்றோம். 53 அற்புத மான பொறுமைய டிஅவள் அற்புத ஞானப் பெருமையடி! அற்புத மான சிறுமைய டிஇப்போ அற்பத் தனத்தினால் தேடிவைத்தோம். 54 பெற்ற வயிறுமெ ரியாதோ அவள் பேதை மனமும் வருந்தாதோ? பெற்ற குழந்தைகள் தன்னை மறந்ததைப் பெண்ணு மொருத்தி சகிப்பாளோ? 55 பெற்ற மனமுங் கசிந்தழு தேஅந்தப் பேதை உகுத்திடும் கண்ணீரால் பெற்ற தனமும் புகழு மிழந்துநாம் பேதை களானது பெண்ணரசே! 56 தாயை மறந்த குழந்தைக ளெப்படித் தாரணி தன்னில் செழிக்குமடி? தாயை இகழ்ந்த குழந்தைக ளையிந்தத் தாரணி நின்று பழிக்குமடி! 57 அன்னையும் தந்தையும் தெய்வமென்று முன்னம் சொன்ன கிழவியின் வார்த்தையைப் போல் அன்னையும் தந்தையும் அத்தையும் மாமனும் அத்தனை யும்இந்து தேசமடி! 58 |