270நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பெற்றவ ளிந்தியத் தேவிய டிபெயர்
       இட்டவ ளிந்தியத் தேவியடி!
உற்றவன் இந்தியத் தேவிய டிபால்
       ஊட்டி வளர்த்தவ ளும் அவளே.       45

மாதமும் மாரிபொழிந்து செழித்திட்ட
       மாநிலத் துயர்ந்த தேவியடி!
போதமும் வேதமும் முந்தி யுரைத்திட்ட
       புண்ணிய ஞானக் கிழவியடி!       46

முப்பத்து முக்கோடி மக்கள டிஇந்த
       மூப்புடை இந்தியத் தேவிபெற்றாள்
முப்பத்து முக்கோடி மக்களுந் தானுமாய்
       முச்சத்தி வீதியில் சுத்துகின்றாள்.       47

மூப்புடை இந்தியத் தேவியடி நம்மை
       முன்னம் பயந்து வளர்த்தெடுத்தாள்
மூப்புடை இந்தியத் தேவிய டிநம்மை
       இன்னும் பரந்து முகம்துடைப்பாள்.       48

இந்தியத் தேவிநம் மைபயந் தாள்கலை
       இந்திய தேவிந மக்களித்தாள்
இந்திய தேவிந மைப்புரந் தாள்அந்த
       இந்திய தேவியை நாம்மறந்தோம்.       49

எத்தனை காலஞ் சுமந்திருந் தாள்நமக்
       கெத்தனை கஷ்ட மனுபவித்தாள்!
அத்தனை கஷ்டமும் நாமறந் தோமவள்
       அத்தனை குற்றமு மேபொறுத் தாள்!       50

கோடானு கோடி பகைவர டிமுன்னம்
       கொள்ளை யடித்திட வந்தவர்கள்
கோடானு கோடியும் தான்சகித் துத்தன்
       குஞ்சு குழந்தையை ஆதரித்தாள்.       51