புலவர் சிவ. கன்னியப்பன் 269

வாசம டிபுகழ் வீசுமடி எங்கள்
       தேசம டிவந்த மோசமடி!
நாசம டிவெகு நாசம டிமனங்
       கூசுத டிபழி யேசுதடி!       38

பொங்குத டிமனம் பொங்குத டிஉடல்
       பொங்குத டிதுயர் தங்குதடி!
மங்குத டிமதி மங்குத டிமட
       மங்கைய ரேயென்ன பங்கமடி!       39

எண்ணவெண் ணமனங் குன்றுத டிவினை
       என்னென்று சொல்லுவேன் கன்னியரே!
பண்ணிய தொல்லைப் பழவினை யோவென்ன
       பாவம டிஎவர் சாபமடி!       40

ஏன் இக்கதி யடைந்தோம்?

பாவமல் லவருஞ் சாபமல் லமுனி
       கோபமுஞ் சாமியின் குற்றமல்ல;
தாபம டிபெற்ற தாயைம றந்ததால்!
       தாழ்வடைந் தோமடி தையலரே!       41

மாதாவின் பெற்ற வயிறெரிய நாமும்
       மகேஸ்வர பூசையைச் செய்தமடி
ஆதலி னாலிந்த வேதனை வந்ததும்
       ஆச்சரி யமல்ல ஆச்சியரே!       42

அந்தத் தாய் யார்?

தேசம டிஇந்து தேசம டிதம்மைப்
       பாசமு டன்பெற்றுப் பாலித்தவள்
தேசம டிஇந்து தேசம டிஎங்கள்
       தேவிய டியெங்கள் ஆவியடி!       43

தேவிய டிஇந்து தேவிய டியெங்கள்
       ஆவிய டிஉங்கள் ஆவியடி!
பாவிய டிவெகு பாவிய டிபடு
       பாதக ரெங்களைப் பெற்றதனால்!       44