புலவர் சிவ. கன்னியப்பன் 275

கைத்தொழில் கெட்டுக்க லங்குத டிதேசம்
       கைத்தொழி லின்றிப் புலம்புதடி!
கைத்தொழில் தம்மை விருத்திசெய் தாலந்தக்
       கண்ணுடைத் தேவியும் கண்விழிப்பாள்.       80

ஆயிரம் ஆயிரம் வித்தையடி இங்கே
       ஆதரிப் பாரின்றிச் செத்ததடி
ஆயிரம் ஆயிரம் கைத்தொழி லாளிகள்
       ஆதர வின்றி உயிர்துறந்தார்.       81

இந்தியத் தேவியின் கைத்தொழிலை நாமும்
       ஏற்றுப் புகழக் கடமைப்பட்டோம்.
இந்தியத் தேவியின் வித்தைகளை நாமும்
       எந்த விதத்திலும் ஆதரிப்போம்!       82

இந்திய தேசத்தில் உண்டா னபொருள்
       எந்த விதத்திலு முத்தமமே!
இந்திய தேசத்தொ ழிலாளிநமக்
       கெந்த விதத்திலும் சொந்தமதால்.       83

அன்னியர் சரக்கைத் தீண்டோமே நாமும்
       அன்னியர் தயவை வேண்டோமே
அன்னியர் பொருளைத் தீண்டுந்தோ றும்அந்த
       அன்னை வயிற்றி லடிப்பதுபோல்.       84

பயன்

என்று நினைத்து மனங்கசிந் துநாமும்
       இந்தியத் தேவியைப் போற்றிசெய்தால்
நின்ற துயரம் மறையுமடி இங்கே
       நீடிய பஞ்சம் பறக்குமடி.       85

கண்டுகொண் டோமடி கண்மணியேஇனி
       காரண மின்னதெ னத்தெரிந்தோம்.
பண்டைச் சிறப்பினை நாமடை யஇந்துப்
       பாவை பதத்தினைப் பூஜைசெய்வோம்.       86