276நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கேளுங்க டிஇனிக் கேளுங்க டிவந்து
       வீழுங்க டிஅவள் பாதத்தினில்
வாழுங்க டிஇனி வாழுங்க டிஅவள்
       வாழ்த்தி யிருந்து வரங்கொடுப்பாள்.       87

கிட்டுங்க டிகையைத் தட்டுங்க டிமலர்
       கொட்டுங்க டிஅவள் பாதத்தினில்
விட்டத டிசனி விட்டத டிபழி
       விட்டத டிதுயர் விட்டதடி.       88

பஞ்சமும் நோயும் பறக்குமடி அந்தப்
       பத்தினி தேவியை நாம்நினைந்தால்
பஞ்சமும் நோயும் பற்றுமடி அந்தப்
       பத்தினி தேவியை நாம்மறந்தால்.       89

இல்லையில் லையென்று பல்லை யிளிப்பதும்
       இல்லைய டிஇனி இல்லையடி!
இல்லைய டிபசி இல்லைய டிதோயும்
       இந்தியத் தேவியை நாம்நினைந்தால்.       90

உத்தம மாகிய ராஜாங் கம்இனி
       ஒப்பில தாகி உயருமடி
நித்திய மாக நிலைக்கும டிநல்ல
       நீதியும் வேத நெறிமுறையும்.       91

பொங்கும டிபால் பொங்கும டியினி
       புண்ணிய பூமி மனைதோறும்
மங்கும டிவினை மங்கும டிஇந்த
       மங்கையை நாமும் மனதில்வைத்தால்.       92

ராச்சியம் பொங்கித் தழைத்தோங் கநாமும்
       ராச்சியம் வேண்டி உழைத்திடுவோம்.
ஓச்சிய கோலு முயிர்த்தோங் கநாமும்.       93

நீதி நிலைக்க நினைத்து வருகின்ற
       நிர்மல மாகிய ராஜாங்கம்