ஆதி அரசின் வழிமுறை யேநின்றிங் காதித்தன் போல விளங்குமடி! 94வாழி வாழி மழைபொழி வானமொடு வரு மேழி யுழவர் வழிவாழி வாழிய கைத்தொழில் வாணிபம் தம்மொடு வாழ்விக்க நின்றிடும் ராஜாங்கம்! 95 வாழி முனிவர்கள் தேடி யளித்திட்ட வேத வழிவரும் நீதியெல்லாம்! வாழியர் ஞான முணர்ந்தோர் கள்வழி! வாழிய இந்த உலகமெலாம்! 96 இந்தியத் தேவி தனக்கா கத்தங்கள் சொந்த சுகத்தைத் துறந்தவர்கள் எந்த மதத்திலும் எந்தக் குலத்திலும் வந்தவர் வந்த வழிவாழி! 97 182. விடுதலைக்கு விதை விதைத்த வீரர் கூட்டம் இப்போது நூறாண்டு களுக்கு முன்னால் இந்தியத்தாய் சுதந்தரமே எண்ண மாக அப்போதே இந்நாட்டை அடக்கி யாண்ட ஆங்கிலரை அகற்றநின்ற ஆர்வம் தன்னைச் சிப்பாய்கள் கலகமென்ற நாமம் சூட்டிச் சிந்தித்துப் புத்தகத்தில் எழுதி னாலும் தப்பாமல் அதன்பெருமை நினைவு கூர்ந்து தலைவணங்கித் தாய்நாட்டைத் தாங்கி நிற்போம்! 1 எங்கிருந்தோ எப்போதிங் கெவர்வந் தாலும் எதிர்கொண்டு வரவேற்று இனிதே பேசிப் பங்கிருந்தே உண்டுடுக்கப் பலவும் செய்யும் பரிவுடைய தமிழ்நாட்டுப் பண்பிற் கேற்பத் |