278நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தங்குதற்கிங் கிடம்கேட்ட ஆங்கி லர்க்குத்
       தயவாகச் சென்னையிலே இடந்தந் தார்கள்
அங்கிருந்து மெள்ளமெள்ள இந்த நாட்டின்
       ஆட்சிதனை அபகரித்தார் சூழ்ச்சி யாலே.       2

சமயமுற்ற போதெல்லாம் சதிகள் செய்தார்;
       இந்நாட்டு மன்னரிடை சண்டை மூட்டித்
தமையடுத்த அரசருக்கும் உதவி போலத்
       தந்திரமாய் அவர்களைத்தம் அடிமை யாக்கி
இமயமுதல் குமரிமுனை இறுதி யாக
       இப்பெரிய திருநாட்டைப் பற்றிக் கொண்டார்.
சுமைசுமையாய் இங்கிருந்த செல்வம் தன்னைச்
       சூரைகொண்டு சீமைக்குத் தூக்கிச் சென்றார்.       3

நாகரிக அரசாட்சி நடத்தி இங்கே
       நன்மைசெய்ய வந்தவர்போல் தோன்றினாலும்
போகமிகும் பதவியெல்லாம் வெள்ளை யர்க்கே;
       புழுக்கைகளின் வேலைகளே இந்தியர்க்காம்;
சோகமுற்று இதைக்கண்ட சுதேச மக்கள்
       சுதந்தரத்தின் சிறப்புணரத் தொடங்கி னார்கள்;
வேகமுடன் எண்ணிமனம் வெந்து நொந்து
       வீறுகொண்டு விடுதலைக்கே துணிந்திட் டார்கள்.4

‘இந்துமதக் கொள்கைகளில் தலையிட்டார்கள்;
       இஸ்லாம்கள் மதத்தினையும் இகழ்ந்திட் டார்கள்;
சொந்தமதம் கிறிஸ்தவத்தைப் பரப்பு தற்கே
       சூழ்ச்சியுடன் ஆட்சிசெய்யத் தொடங்கியுள்ளார்;
இந்தவிதம் மதத்தினைநாம் இழக்க லாமா?‘
       என்றுபல காரணங்கள் இணைத்துக் கூறிப்
பந்தமற வெள்ளையரை வெறுக்கும் பேச்சே
       பட்டாளத் தார்களிடைப் பரப்பி னார்கள்.       5

குறிப்புரை:- வீறு - வேகம், வெற்றி.