புலவர் சிவ. கன்னியப்பன் 279

சுதந்தரத்தில் பேரார்வம்

சுதந்தரத்தில் பேரார்வம் உச்சிக் கேறிச்
       சூழ்நிலைக்கே காத்திருந்த மக்க ளுக்குள்
மதங்கெடுக்க வெள்ளையர்கள் வந்தார் என்ற
       மாற்றமது மந்திரம்போல் சீற்ற மூட்ட
முதன்முதலாய்ச் சிப்பாய்கள் பரிஹம் பூரில்
       வெள்ளையர்க்குக் கீ்ழ்ப்படிய முடியா தென்றார்;
அதன்பயனாய் அவர்களுக்கு விலங்கு பூட்டி
       அடைத்திட்டார் சிறைக்குள்ளே ஆங்கி லேயர்.       6

அதிலிருந்தே சுதந்தரப்போர் ஆரம் பந்தான்;
       ஆயிரத்தெண் ணூற்றைம்பத் தேழா மாண்டில்
மதிகணக்கில் மேமாதம் பத்தாம் தேதி
       மருவியநாள் ஞாயிற்றுக் கிழமை மாலை
பதிசிறந்த மீரத்துப் பட்டி னத்தின்
       பாங்கிருந்த சிப்பாய்கள் படைகள் மூன்றும்
கொதிமிகுந்து வெள்ளையரைச் சுட்டுக் கொன்று
       கொடிதூக்கிச் சுதந்தரப்போர்க் கோலங்கொண்டார்.       7

உடைத்தார்கள் சிறைச்சாலைக் கதவை யெல்லாம்
       உள்ளிருந்த யாவரையும் விடுவித் தார்கள்;
படையெடுத்துத் தில்லியைப்போய்ப் பற்றிக் கொண்டு
       பகதூர்ஷா மன்னனெனப் பறைசாற் றிட்டார்;
அடைவாக அங்கிருந்த பட்டாளங்கள்
       அவைமூன்றும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு
தடையிலராய்த் தம்முடைய பட்டா ளத்தின்
       தலைவர்களாம் வெள்ளரைச் சுட்டுக் கொன்றார்.       8

அன்னியர் கொட்டத்தை அடக்கி விட்டோம்
       ஆங்கிலேயர்கள் இனிநம்மை ஆள வொட்டோம்.
என்னுமொரு நம்பிக்கை எழுந்து பொங்க
       எங்கெங்கும் வெள்ளையருக்(கு) எதிர்ப்புண் டாகி