புத்திர வதியாரின் - மூன்றாம் புத்திரரா கப்பிறந்தார் உத்தமர் காந்தி அன்னையும் தந்தையுமே - நாம் அறிந்த கடவுளென்று நடந்திடுவார். பள்ளிப் பருவத்திலும் - சிறு பையன்களின் துடுக்குகள் செய்யமாட்டார். எவ்வளவும் பொய்பேசார் - மற்ற எவரொடும் தவறுகள் எதுவும் செய்யார். ஆசான் மார்களுங்கூடக் - கண்டே ஆச்சரியப் படும்படி நடந்து கொள்வார். 15பன்னிரண்டு வயதினிலே - கஸ்தூரி பாய்என்னும் உத்தமியை மணமுடித்தார். தாயார் பெருங்குணமும் - கொண்ட தாரந்தனக் கேற்றபடி வாய்ந்த நலமும் ஓயாப் புகழுடனே - காந்தி உலகினுக் குழைப்பதற் குதவியென்பார். பெண்ணின் பெருமையன்றோ - நாட்டின் பெருமைகள் யாவினுக்கும் பிறப்பிடமாம்? பத்தொன் பதுவயதில் சீமை பாரிஸ்டர் பரிக்ஷைக்குப் போய்ப்படிக்க 20 ஆசைகொண் டார்காந்தி - கேட்ட அறிந்தவர் பந்துமித்ரர் அனைவருமாய்ச் சீமைக்குப் போனாலே - ஒழுக்கம் சீர்கெட்டு நம்ஆசாரம் போய்விடுமென்று தடுத்தார் பலபேர்கள் - பெற்ற தாயாரும் சம்மதிக்கத் தயங்கிநின்றார். காந்தியின் பிடிவாதம் - கண்டு கடைசியில் அன்னையொரு விதந்தேறி "மூன்றுவிதச் சபதங்கள் - செய்து மற்றுமவை காப்பேனென்று சத்தியஞ்செய்தால் 25 |