தருவேன் விடை"யென்று - பெற்ற தாயுரைத்த வாசகத்தைத் தலைவணங்கி "அருள்வீர் என்னசபதம்" - என்றார் அன்னையவள் தன்மகனை யணைந்துச்சொல்வாள்; "மாமிசம் மதுவுண்ணல் - பர மாதர்களைக் காமுறுதல் இவை மூன்றும் செய்யேன் என்றெனக்கே - சத்தியம் செய்தபின்னச் சீமைக்குச் செல்லுக" என்றாள் "செய்வேன் அப்படியே - அந்தச் சீமையிலே மட்டுமல்ல சென்மமுழுதும் 30 செய்வேன்" என்று சொல்லி - ஒரு சிறந்த சமணசந் யாசியின் முன்னால் சத்தியம் செய்து கொடுத்தார் - தாய் சந்தோஷ மாகவிடை கொடுத்தனுப்பச் சீமைக்குச் சென்றங்கே - தாய்க்குச் செய்துவந்த சத்தியங்கள் பிசகாமல் பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் - திரும்பப் பம்பாய் நகரில்தொழில் செய்யும்போது தென்னாப்பி ரிக்காவிலே - சில தெரிந்த மகமதிய வியாபாரிகள் 35 வக்கீல் தொழிலாக - ஒரு வழக்கை நடத்த அங்கு வரக்கேட்டார். போனார் காந்தியங்கே - முன்னால் போயிருக்கும் இந்தியர்கள் படும்பாட்டைப் பார்த்தார் பரிதவித்தார் - மீண்டும் பம்பாய் திரும்பமனம் படியாமல் இந்தியரின் உரிமைக்காக - அங்கே இருபது வருஷங்கள் இருந்துழைத்தார். விண்ணப்பம் செய்துபார்த்தார் - லண்டனில் வேண்டிய துரைகளைக் கெஞ்சிக் கேட்டார். 40 |