செய்வதுதான் இன்னதென்று - தமக்குத் தெளிய விளங்கவில்லை அதனாலே ‘கிச்சிக் கிச்சித் தம்பளம்‘ போல் - சர்க்கார் பிடிக்கவும் விடுக்கவும் செய்ய நடத்தல் கண்ணியக் குறைவென்று - தண்டனைக் காலம் ஒருவருடம் கழியுமட்டும் அரிஜன சேவை ஒன்றே - அதன்பின் ஆண்டவன் விட்டவழி விடட்டும் என்றே ஏழைகளுக்(கு) உழைப்பதற்கே - தவம் ஏந்தும் காந்திபுகழ் என்றும் வாழ்கவே! 120 குறிப்புரை:- சரிதம் - வரலாறு; மலிந்திருக்கும் - மிகுதியாக இருக்கும்; பூதலத்தில் -உலகில்; கனதையென்று - பெருமை என்று; உத்தமர் - மேலானவர;் உத்தமி - பெண்பால்; ஆசாரம் - ஒழுக்கம்; வாசகத்தை - சொல்லை; காமுறுதல் - விரும்புதல்; சீமை - அயல்நாடு; தன்கையே தனக்குதவி - பிறர் உதவியை நாடாமல் தனக்கு வேண்டிய செயல்களைத் தானே செய்து கொள்ளுதல்; சாந்தமுடன் - அமைதியுடன், சர்வேசன் - எங்கும் நிறைந்த இறைவன்; இடர் - துன்பம்; சகித்து - பொறுத்து; சேவை - தொண்டு; கண்ணியம் - மேன்மை.
|