புலவர் சிவ. கன்னியப்பன் 291

எங்கும் பரபரப்பாய்ப் - பூனா
எரவாடா ஒப்பந்தமும் நிறைவேறி,
சிறையில் இருந்தபடியே - அரிஜன
சேவை செய்ய வசதிகள் செய்துகொடுத்தார்.
சிலநாள் சென்றதன்பின் - இந்துக்கள்
தீண்டாமை விஷயத்தில் மனமிரங்கத்
தாம்ஒரு மூன்றுவாரம் - பட்டினித்
தவஞ்செய்யக் கடவுளின் ஆணையெவரும்
தடைசொல்லக் கூடாதென்றும் - காந்தி
தாமெடுத்த விரதத்தைச் சார்க்கா ரஞ்சி       105

விடுதலை செய்து விட்டார் - உடனே
சட்டமறுப் பைச்சிறிது நிறுத்தச் சொல்லிப்
பட்டினியை வென்று முடித்தார் - கிழவர்
பயந்தவர் யாவரும் வியந்திடவே
தலைவர்க ளோடுகலந்து - முடிந்தால்
சண்டையை முடித்தேஒரு ராஜிசெய்யவே
வைசிராய் வில்லிங்டனைத் - தாம்
வந்துகாணச் சம்மதிக்கத் தந்திகொடுத்தார்.
பதில்தந்தி மறுத்திடவே - முதலில்
பாடுபட்டுத் தாம்வளர்த்த பயிரான       110

சபர்மதி ஆச்சிரமத்தை - மூடித்
தாமும்சில சீடர்களும் சிறைபுகுந்தார்.
சிறையினில் முன்போல - அரிஜன
சேவைக்கு வசதி சர்க்கார் குறைத்ததனால்
வசதிகள் அவைபோனால் - இனித்தாம்
வாழ்வதன் லட்சியம் போனதென்றே
பட்டினியிற் சாகத்துணிந்தார் - உலகம்
பயந்து நடுநடு்ங்கிப் பரதவிக்கத்
தெய்வச்செய லேபோல - காந்தியைத்
திரும்பவும் சர்க்கார் விட்டுவிடவே       115