சுத்தமேனும் ஜாதியால் தொடப்ப டாதிங்கு என்றிடில் தொத்து நோயைக் காட்டிலும் கொடியர் என்று சொல்வதோ? 2நாய்குரங்கு பூனையை நத்தி முத்த மிடுகிறோம் நரகல் உண்ணும் பன்றியும் நம்மைத் தீண்ட ஒப்புவோம்; ஆயும் நல்ல அறிவுடை ஆன்ம ஞான மனிதனை அருகி லேவ ரப்பொறாமை அறிவி லேபொருந்துமோ? 3 செடிமரங்கள் கொடிகளும் ஜீவர் என்ற உண்மையை ஜெகம றிந்து கொள்ளமுன்பு செய்தது இந்த நாடடா? முடிவு அறிந்த உண்மை ஞானம் முற்றி நின்ற நாட்டிலே மூடரும் சிரிக்கும் இந்த முறையி லாவ ழக்கமேன்? 4 உயிரி ருக்கும் புழுவையும் ஈச னுக்காம் உறையுளாய் உணரு கின்ற உண்மைஞானம் உலகி னுக்கு ரைத்த நாம் உயருகின்ற ஜீவருக்குள் நம்மொடு ஒத்த மனிதனை ஒத்திப் போகச் சொல்லுகின்ற(து) ஒத்துக் கொள்ள லாகுமோ? 5 அமல னாகி அங்குமிங்கும் எங்கு மான கடவுளை ஆல யத்துள் தெய்வமென்றே அங்கி ருந்தே எண்ணுவோம்; |