30நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஆத்திசூடி நல்லறிவு அழித்து விட்டாய்
ஆசாரக் கோவைதன்னை இழித்து விட்டாய்
பார்த்திதனை அன்னியரும் பரிக சித்தார்
பாவமிதைப் புண்ணியம்போல் மிகர சித்தாய்.       4

தள்ளரிய தெய்வத்தின் நினைவு கூட்டும்
பிள்ளையார் சுழிபோட்டுக் கடிதம் தீட்டும்
தெள்ளறிஞர் நமதுமுன்னோர் செயலைக் கூட
எள்ளிநகை யாடுகின்றாய் ஏழை நெஞ்சே!       5