மக்களை வதைத்திடும் மனைவியை உதைத்திடும் துக்கமான கள்ளினைத் தொலைப்பதே துரைத்தனம். (குடி)2 பித்தராகி ஏழைகள் பேய்பிடித்த கோலமாய்ப் புத்திகெட்டுச் சத்தியற்றுப் போனதுஇந்தக் கள்ளினால் (குடி)3 பாடுபட்ட கூலியைப் பறிக்கும்இந்தக் கள்ளினை வீடுவிட்டு நாடுவிட்டு வெளியிலே விரட்டுவோம்! (குடி)4 கஞ்சியின்றி மனைவிமக்கள் காத்திருக்க வீட்டிலே வஞ்சமாகக் கூலிமுற்றும் வழிபறிக்கும் கள்ளினை (குடி)5 மெய்தளர்ந்து மேனிகெட்டுப் போனதுஇந்தக் கள்ளினால்; கைநடுக்கங் கால்நடுக்கங் கண்டதுஇந்தக் கள்ளினால். (குடி)6 தேசமெங்கும் தீமைகள் மலிந்ததுஇந்தக் கள்ளினால்; நாசமுற்று நாட்டினர் நலிந்ததுஇந்தக் கள்ளினால். (குடி)7 குற்றமற்ற பேர்களும் கொலைஞராவர் கள்ளினால்; கத்திருத்துச் சண்டைவேண கள்ளினால் விளைந்துவே. (குடி)8 |