குற்றம்என்று யாருமே கூறும்இந்தக் கள்ளினை விற்கவிட்டுத் தீமையை விதைப்பதென்ன விந்தையே! (குடி)9 194. கர்ப்பிணிக்குப் பூ முடித்தல் கல்லி னுட்சிறு தேரை யோடு கருவி லேவளர் யாவையும் எல்லை யில்பல ஜீவ கோடியை எங்கு மாய்நின்று காத்திடும் வல்ல வெம்பெரு மான்அருள்தனால் வஞ்சி யேபிள்ளை யாண்டானை நல்ல பூமுகை சூட்டு வோம்அந்த நாதன் உன்றனைக் காக்கவே. 1 மல்லிகை நல்லமுல்லை யாதிய வெள்ளை யாமலர் சூட்டுவோம்; சொல்லும் அன்னவை வெண்மை போலநீ சுத்த மாயிரு நித்தமும்; பல்லு முன்றன்ப டுக்கை யோடின்னும் பாவை யேஉன்றன் யாவையும் நல்ல வெள்ளை யெனச் சொல்லும்படி நாளும் வைத்திட வேண்டியே. 2 வாடி னாலும் வதங்கி னாலும்தம் வாடை வீசுதல் வாடிடா நாடி யேமரு காம ருக்கொழுந் தோடு நன்மகிழ் சூட்டுவோம்; பாடு நீமிகப் பட்ட போதிலும் பக்தி யோடிரு நித்தமும்; தேடி யேஉனைத் தேவன் வந்தருள் செய்கு வான்பய மில்லையே. 3 |