தொட்ட போதிலும் சற்று வாடிடும் சொல்லொ ணாமிக மெல்லிது இட்ட மாகவே யாரும் ஆசைகொள் இன்ப ரோஜா இம்மலர் கஷ்ட மாகிய வேலை யொன்றையும் கட்டி நீசெயல் விட்டிடு; நுட்ப மாகிய உன்றன் மேனியும் நொந்தி டில்துயர் தந்திடும். 4 நீளுமா மலர்த் தாழை யோடு நிறைந்த மாமலச் சண்பகம் சூழும் நல்ல மணமி குந்தவை சுத்த ரிக்கிவை சூட்டுவோம் வாழும் அந்த வனமு ழுவதும் வாடை யோடியு லாவல்போல் நாளும் நீஉன்தன் வீடி(து) எங்கும் நடந்து லாவுதல் வேண்டியே. 5 சேற்றில் நின்று வளர்ந்து நீரினிற் சேர்ந்தி ருப்பினும் தாமரை சாற்றும் ஓரள வுக்கு மீறிடத் தான்அ ருந்துமோ நீரினை? சோற்றின் மூழ்கி யிருந்த போதிலும் சொற்ப மாகவே சுத்தமாய்ப் போற்றி யுண்ணுதல் வேண்டு மென்றுஅந்தப் பூமு டித்தனள் பூவையே. 6 195. மக்கட் செல்வம் பெற்றிடும் செல்வத்(து) எல்லாம் பெரியது மக்கட் செல்வம்; உற்றிடும் இன்பத்(து) எல்லாம் உயர்ந்தது மக்கள் இன்பம்; |