மற்றிதை உலகில் எந்த மனிதனும் மறுக்க ஒணாது; சற்றிதை மதித்து நாமும் சரிவர நடப்போ மாக. 1 சிறந்திடும் இன்ப மான சிசுவது நமக்கு வந்து பிறந்திடு முன்னும் பின்னும் நாம்செய்யும் பிழைக ளாலே அருந்தவக் குழந்தை இன்பம் அனுபவிப் பதற்கு முன்னால் இறந்திடும் அதனைப் போல இன்னொரு துன்பம் உண்டோ? 2 உருவினில் குறைந்த(து) என்றும் உடல்மிக மெலிந்த(து) என்றும் அறிவினில் குறைந்த(து) என்றும் அழகினை இழந்த(து) என்றும் பிறவியின் குறைகள் எல்லாம் பெற்றவர் குற்றத் தாலே கருவினில் அமைந்த(து) அல்லால் கடவுளின் குற்ற முண்டோ? 3 விதிவிலக்கு அறிந்து வாழ்ந்து விமலனை மனத்துள் எண்ணி மதியினைக் கொண்டு சுத்த மார்க்கத்தில் நின்று நாமும் புதல்வரைப் பெற்று மற்றும் புத்தியாய் வளர்ப்போ மானால் இதமுற வந்த மக்கள் இளமையில் இறப்ப துண்டோ? 4 வித்தினைப் போற்றித் தூவும் விளைநிலம் பழுது பார்த்துச் |