சுற்றிடும் மிருக வாசை துடைத்திடா வேலி சுற்றிப் பத்தியில் காத்துப் பண்ணைப் பயிரது செய்து விட்டால் சொத்தையாய்ச் சோகை யாகத் தோன்றுமோ செந்நெல் சொல்வாய்? 5 குறிப்புரை:- மதி - அறிவு; புத்தி - அறிவு; சோகை - ஒருவகை நோய். இரத்தக்குறைவால் முகம் வெளுத்துக் காணப்படுவது. 196. ஒரு மருந்து தெய்வத் தனம்மிக்க மானிட சென்மம் தீமை வளர்த்துத் திகைப்பதும் என்னே! கையில் கடுங்கொலைக் கருவிகள் கொண்டு கண்ணில் வெறிகொண்ட பார்வை மருண்டு வெய்யில் புழுவென்ன வேதுடி துடிப்போம் வேதனை பொங்கும் மனம்படும் பாடும் வையத்தில் எங்கும் மனிதர்கள் யாரும் வாழ்க்கையின் இன்பம் இழந்தனர் பாரும். 1 அன்பிற்கென் றேவந்த மனிதப் பிறப்பே ஆறறி வுள்ளதென் பார்கள் சிறப்பே துன்பத்துக் கேமுற்றும் அறிவைச் செலுத்திச் சுட்டு மடிக்கிறார் ஊரைக் கொளுத்தி, இன்பம் அடைந்தவர் யாரையும் காணோம் ஏதுக்கு மக்களைக் கொல்லுவர் வீணே!‘ என்பத்தை மாற்ற மருந்தென்ன வென்றே ஏங்குவர் யாரும் அறிஞர்கள் இன்றே.2 கொஞ்சிக் குலாவுதல் மக்கள்ம றந்தார் கூடிப் பழகுதல் கூடக்கு றைத்தார் அஞ்சிந டுங்கிஒ துங்குகின் றார்கள் ஆகாயம் பார்த்துப் பதுங்குகின்றார்கள். |