சகல தேச மக்க ளோடும் சரச மாடி வருவது; இலகும் எந்த வேற்று மைக்கும் ஈசன் ஒன்றே என்பதை இடைவி டாமல் காட்டும் எங்கள் இனிமை யான தமிழ்மொழி. 2 கொலைம றுக்கும் வீர தீரக் கொள்கை சொல்லும் பொன்மொழி! கொடியவர்க்கும் நன்மை செய்யக் கூறுகின்ற இன்மொழி; அலைமிகுந்த வறுமை வந்தே அவதி யுற்ற நாளிலும் ஐய மிட்டே உண்ணு கின்ற அறிவு சொல்லும் தமிழ்மொழி; கலைமி குந்த இன்ப வாழ்வின் களிமி குந்தபொழுதிலும் கருணை செய்தல் விட்டி டாத கல்வி நல்கும் மொழியிது; நிலைத ளர்ந்து மதிம யங்க நேரு கின்ற போதெலாம் நீதி சொல்லி நல்லொ ழுக்கம் பாது காக்கும் தமிழ்மொழி. 3 அன்பு செய்தும் அருள் அறிந்தும், ஆற்றல் பெற்ற அறமொழி; அறிவ றிந்து திறமை யுற்றே அமைதி மிக்க திருமொழி; இன்ப மென்ற உலக றிந்த யாவு முள்ள கலைமொழி; இறைவ னோடு தொடர்ப றாமல் என்று முள்ள தென்றமிழ். துன்ப முற்ற யாவ ருக்கும் துணையி ருக்கும் தாயவள்; |