துடிது டித்தே எவ்வு யிர்க்கும் நலம ளிக்கும் தூயவள்; தென்பு தந்து தெளிவு சொல்லும் தெய்வ மெங்கள் தமிழ்மொழி; திசைக ளெட்டும் வாழ்த்து கின்ற இசைப ரப்பச் செய்குவோம். 4 பழிவ ளர்க்கும் கோப தாப குரோத மற்ற பான்மையும் பகைவ ளர்க்கும் ஏசு போக ஆசை யற்ற மேன்மையும், அழிவு செய்யக் கருவி செய்யும் ஆர்வ மற்ற எண்ணமும், அனைவருக்கும் தன்மை காணும் வித்தை தேடும் திண்ணமும் மொழிவ ளர்ச்சி யாக்கு மென்ற உண்மை கண்டு முந்தையோர் முறைதெ ரிந்து சேர்த்த திந்த நிறைமி குந்த முதுமொழி, வழிய றிந்து நாமும் அந்த வகைபு ரிந்து போற்றுவோம்; வஞ்ச மிக்க உலக வாழ்வைக் கொஞ்ச மேனும் மாற்றுவோம். 5 18. தமிழ் வாழ்க நாளும் தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில் அமிழ்தென்று வருகின்ற அதுவந்து சேரும். நமதிந்தப் பெயர்கொண்ட மொழியென்ற எண்ணம் தமிழர்க்குப் புகழ்மிக்கத் தருமென்றல் திண்ணம். 1
பயிருக்கு நீர்என்ற பயன்மிக்க வழியே உயிருக்கு வெகுநல்ல உணர்வுள்ள மொழியே. துயருற்ற மனதிற்குத் துணைநின்றே உதவும்; அயர்வற்ற ஞானத்தை அடைவிக்கும் அதுவே. 2 2 நா.க.பா.பூ.வெ. எ. 489 |