அன்பென்று அதைமிக்க அறிவிக்க நின்று துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்; தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம். 3 அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம் பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்; இருள்கொண்ட உள்ளத்தில் இயல்பான பழியைத் தெருள்கொள்ள ஒளிதந்து திகழ்கின்ற மொழியே. 4 அறிவென்று பெயர்கொண்ட அதைமட்டும் நாடும்; குறிகொண்டே உலகெங்கும் குறைவின்றித் தேடும்; வெறிகொண்ட இனம்என்று வெகுபேர்கள் போற்றும் நெறிகொண்ட தமிழ்மக்கள் நிறைகண்ட மாற்றம். 5 கலையென்ற கடலுக்குக் கரைகண்ட புணையாம் நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்; அலைபட்ட மனதிற்கு அமைதிக்கு வழியாம்; மலையுச்சி ஒளியன்ன மறைவற்ற மொழியாம். 6 அறமன்றிச் செயலொன்றும் அறியாத மொழியாம்; மறமென்ற செயல்என்றும் மதியாத மொழியாம்; நிறமென்று மதமென்று நிந்தித்தல் அறியாத் திறமுள்ள தமிழென்று திசைமெச்சும் நெறியாம். 7 குணமென்ற அதைமட்டும் கும்பிட்டு நாளும் பணமென்ற பலமென்ற பயமின்றி வாழும் இணையற்ற உறுதிக்கு இசைமிக்க வழியாம் மணமிக்க தமிழென்று மதிமிக்க மொழியாம். 8 பலகாலம் பலநாடும் பரிவோடு சுற்றி உலகோரின் பலசொல்லை உறவோடு கற்று விலகாத நட்பிற்கு வெகு கெட்டி வேராம்; தலையாய அறிவிற்குத் தமிழென்று பேராம். 9 |