வேலையில் லாதவர் யாருமில்லை - முற்றும் வீணருக்(கு) அங்கே வேலையில்லை கூலியில் லாதவர் யாருமில்லை - சும்மா கும்பிட்டுத் தின்கின்ற கும்பலில்லை. 7 கூனும் குருடனும் நொண்டி முடங்களும் கொஞ்சம்; அவருக்கும் பஞ்சமில்லை. தானம் கொடுப்பதுஎன்(று) இல்லாமல் - பொது தர்மம் என்றே வைத்துத் தாங்கிடுவார். 8 ஒப்பி மனங்களித்(து) எல்லோரும் - அங்கே உண்டு உடுத்துக்க ளித்திடுவார் தப்பிதம் செய்திடத் தோன்றாதே - அதன் தண்டனை தந்திட வேண்டாது. 9 வாது வழக்குக்கு நேரமில்லை - அங்கே வஞ்சித்து வாழமு டியாது சூதுசெய் பந்தயம் ஏதுமில்லை முற்றும் சோம்பிச் சகிக்க வழியுமில்லை. 10 கள்ளைக் குடிப்பது கூடாது - அங்கே காமக் கலகங்கள் கண்டதில்லை. கொள்ளை அடித்திடத் தேவையில்லை - என்றும் கொஞ்சமும் யாருக்கும் பஞ்சமில்லை. 11
காவிரி நீர்வற்றிப் போவதில்லை - ஒரு கால்வாய் மேஸ்திரி எங்குமில்லை; காவலும் கட்டுகள் ஏதுக்குஅங்(கு) எப்போதும் கள்ளர் பயம்என்ற சள்ளையில்லை. 12
பண்ணையக் காரர்கள் எல்லாரும் - எங்கும் பட்டினி என்கிற சொல்லேது? கண்ணியம் அற்றவர் யாருமில்லை - ஒரு காலித்தனம் பண்ண ஏலாது. 13 |