கண்டதும் கேட்டதும் எப்படிப் போனாலும் கச்சேரி வந்துபொய் சொன்னது மெய் கண்டவர் உண்மையைச் சொல்லவும் வாய்பொத்திக் கைகட்டி நின்றிடும் கஷ்டமில்லை. 14 கொடுத்த பணத்தையும் வாங்குதற்கு - நித்தம் கோர்ட்டு வாசலில் காத்திருந்தும் அடுத்த பிறவிக்குப் போகுமட்டும் நொந்தே அல்லல் அடைகின்ற தொல்லையில்லை. 15 துக்கத்தைத் சொல்லி அழுவதற்கும் - வெகு தூரம் நடந்துபி ராதுசொல்லிப் பக்கத்தில் நின்றவர் ஏன்என்று கேட்கவும் பற்றற்றுப் போவதும் சற்றும் இல்லை. 16 தீண்டப் படாதுஎன்று சொன்னாலும் - அங்கே தீண்டுதல் வேண்டித் திரிவதில்லை வேண்டிய சுகங்கள் யாவும் பிறரைப்போல் வேணமட்டும் உண்டு வேறுஎதற்கு? 17 கோயில் குளங்களும் வேணதுண்டு - ஆனால் கும்பிடப் போவதில் சண்டையில்லை; வாயில் ஜெபதபம் வஞ்சனை நெஞ்சத்தில் வைத்துப் பிழைத்திடத் தேவையி்ல்லை. 18 வட்டிக்குப் போடப் பணமும் இல்லை - அங்கே வட்டிக்கு வட்டிசெய் சட்டம் இல்லை. பெட்டிக்குச் சாவியும் இல்லாமல் - வெறும் பேச்சில் புரண்டிடும் நாணயங்கள். 19 தானியம் தவசம் அல்லாமல் - அங்கே தங்கமும் வெள்ளியும் செல்வமல்ல; நாணய மாற்றுஎன்ற நாடக ஜாலங்கள் நாகரி கப்பித்த லாட்டமில்லை. 20 |