சின்னக் குழந்தைக்குத் தாலிகட்டி - வெகு சீக்கிரம் தாலி அறுத்தாலும் வன்னம் கெடுத்தவள் வாழ்வைக் குலைத்திடும் வண்ட வழக்கங்கள் கண்டதில்லை. 21
நாட்டுக்குப் பகைவர் யாரும்இல்லை - பிறர் நாட்டின்மேல் ஆசையில் லாததனால் சூட்டுக்குச் சூடும் கொடுத்திடுவார் - பகை துட்டர் வந்தாலும்து ரத்திடுவார். 22 204. தாலாட்டு (காவிரியில் கிடைத்த குழந்தையை ஒரு படகோட்டியின் மனைவி தாலாட்டுதல்) ஆராரோ! ஆராரோ! அம்மா நீ கண்ணுறங்கு பேரேதோ! ஊரெதுவோ! பெற்றவர்கள் யாரெவரோ! சீராரும் காவிரித் தேவி திருவருளால் வாராமல் வந்துதித்த மாமணியே கண்ணுரங்கு. (ஆரா)1 ஆழக் கரைபுரளும் காவேரி ஆற்றருகே ஏழைப் படகோட்டி என்கணவன், ஆனாலும் கூழைக் குடித்துறங்கும் குடித்தனந்தான் என்றாலும் கோழைகள் அல்லவம்மா குறைச்சல்உனக்(கு) ஏதுமில்லை. (ஆரா)2 நாளை கணக்கெண்ணி நல்லநல்ல சம்பளத்தில் |