மகிழ்வது மாநில மக்களின் இயல்பு கண்ணாற் காணும் இயற்கைக் காட்சியைச் 10 சித்திரம் வரைந்து சிறப்பென எண்ணுவர் உயிருடன் பார்க்கும் ஒருவரின் உருவைச் சிற்பச் சிலையில் சீராட்டு வார்கள். ஊக்கமும் உணர்ச்சியும் ஊட்டும் சொற்களைப் பாட்டாய்க் கேட்கவே பலரும் விரும்புவர். 15 மணமிக்க மலர்கள் மடியில் இருப்பினும் அவற்றின் அத்தரின் ஆசையே அதிகம்; எலுமிச் சம்பழம், இளநீர், கரும்பைத் தனித்தனி அவற்றின் தன்மை கெடினும் மூன்றும் கலந்தால் முதிர்சுவை என்பர். 20 இன்பம் தருகிற இயற்கை நிகழ்ச்சிகள் அநேகம் உள்ளன. ஆயினும், அவைதாம் வேண்டிய போதுநாம் விரும்பும் விதத்தில் அகப்பட மாட்டா, அதற்கோர் உதாரணம்; காதில் விழுந்ததும் களிக்கச் செய்கிற 25 ஓசைகள் அநேகம் இயற்கையில் உண்டு; ஆனால் அவைகள் நேர்வது அருமை அதனால் அல்லவா அப்படி ஓசையை வாய்பாட்(டு) என்றும் வாத்திய மாகவும், சமைத்துக் கொடுக்கும் சங்கீதத்தைஓர் 30 உயர்ந்த கலையென உலகம் கொள்வது? இப்படி யேபிற எல்லா இன்பமும் செய்யத் தெரிந்த திறமையே ‘கலை‘யாம். கலைகளின் இன்பம் புலன்களைக் கவரும்; ஒழுக்கக் கேட்டையும் உண்டாக்கும்.அதனால் 35 தமிழன் கலையெனத் தநத்ன யாவும் அறங்களைப் போற்றும் அறிவையே நாடும் வேடிக்கை என்றும், விநோதம் என்றும் |