346நாமக்கல் கவிஞர் பாடல்கள்

என்னுடைய மக்களுக்கே
       எடுத்துக் கொடுத்தவளாய்க்
கன்னி யவள்சிரிக்கக்
       களித்துவிட்டார் மக்கள்எல்லாம்.       17

நாளுக்கு நாள்அதன்மேல்
       நலிந்தபடி என்வீடு
மேலுக்கு மேலாக
       மிகவும் பயந்தவன்போல்
‘பாலுக்குங் காவலொடு
       பூனைக்கும் தோழன்‘என்றே
தோல்நிற்க உள்ளிருந்த
       சுளைமறைந்த கொள்கையெனக்
கோல்செய்த என் வாழ் வைக்
       குலைத்துவிட்டாள் மெல்லமெல்ல.       18

என்ன உரைத்தாளோ!
       ஏதுமருந் திட்டாளோ!
அன்னை தந்தை தெய்வம்என்றே
       ஆரா தனைபுரிந்த
என்னுடைய மக்கள்என்னை
       ஏறெடுத்தும் பார்ப்பதில்லை;
சொன்னபடி கேட்பதில்லை;
       ‘தூ‘வென்றும் ‘போ‘ வென்றும்
கன்னியவள் மோகத்தால்
       காலால் எனை உதைப்பார்.       19

கொண்ட சமயம்விட்டார்
       குலதெய்வப் பூசைவிட்டார்
பண்டைப் பெருமையுள்ள
       பக்திகளும் விட்டு ஒழிந்தார்;
கண்டபடி உண்டுடுத்துக்
       கண்டபடி யாய்க்களித்துப்