218. நம் சுதந்தரம் சுதந்தரம் அடைந்தோம் என்ற சுகங்களை அடையு முன்னால் எதிர்த்தன எதிர்பா ராத இடர்பல சகித்து வென்றோம் முதிர்ந்துள யுத்த வேகம் முற்றிலும் மறைந்து போகும் விதந்தனில் நமது நாட்டின் சுதந்தரம் உதவ வேண்டும். 1 அரும்பெரும் காந்தி அண்ணல் அற்புத அறிவு சேர்ந்த பெருந்திறல் காங்கி ரசுதன் பெருமையிற் குறைந்து போகக் குறும்புகள் வளர்ந்தி டாத குறியுடன் கொள்கை காத்து விரும்பிடும் ராம ராஜ்ய சுதந்தரம் விளங்க வேண்டும். 2 அதிகார மோக மின்றி ஆதிக்க தாக மின்றிச் சதிகார எண்ணம் சேராச் சமதர்ம உணர்ச்சி யோடு துதிபாடி நாட்டை வாழ்த்தும் தொண்டர்கள் சூழ்ந்து நிற்கும் நிதியாக காங்கிரஸ் நின்று சுதந்தரம் நிரக்க வேண்டும். 3 காந்தியை மறந்தி டாமல் கருணையைத் துறந்தி டாமல் சாந்தியிற் குறைந்தி டாமல் சத்தியம் இரிந்தி டாமல் |