புலவர் சிவ. கன்னியப்பன் 363

வீரரும் சேனையும் வேண்டியதே
       வெல்லவும் கொல்லவும் தூண்டிடவா!
ஈரமும் இரக்கமும் கெடுத்தவரை
       இடித்துரைத்து அறவழி நடத்திடவே.       5

விஞ்ஞா னத்தால் கொல்லுவதை
       வீரர்கள் போரெனச் சொல்லுவதோ?
அஞ்ஞா னத்தின் வடிவுஅன்றோ
       அணுகுண்டு ஆகிய வெடிகுண்டு?       6

கண்டுபி டித்தவர் நடுங்குகின்றார்?
       காணா தவர்கள் ஒடுங்குகிறார்!
மண்டலத்து அறிஞர்கள் மயங்குகிறார்
       மறைத்திட முயற்சியில் தியங்குகிறார்.       7

கொல்லும் வித்தைகள் பெருகுவதா!
       கொஞ்சிடும் வாழ்வுஇனி அருகுவதா!
சொல்லும் வல்லவர் சொல்லுங்கள்
       சுதந்தரம் இதற்கா சொல்லுங்கள்?       8

இதுதான் தருணம் அடுத்துளது
       இம்சையின் தீமையை எடுத்துரைக்க.
பொதுவாய் உலகினில் போர்வெறியை
       போக்கிடப் புகல்வோம் ஓர்நெறியை.       9

உத்தமன் காந்திசொல் கடைப்பிடித்தால்
       உண்மையில் போர்களைத் தடைப்படுத்தும்
சத்தியம் சாந்தமும் வளராமல்
       சண்டையின் மோகமும் தளராது.       10

இந்திய மக்களின் பொதுச்சிறப்பாம்
       இம்சை வழிகளில் அதிவெறுப்பே;
வந்தனை புரிவது வாய்மைகளை
       வணங்குதல் வாழ்க்கையின் தூய்மையரை.       11