366நாமக்கல் கவிஞர் பாடல்கள்

அன்னியர் இங்கே உள்ளவர் யாரும்
       அண்டிப் பிழைத்திட வந்தவரே!
என்னுடை ஏவல் சொன்னதைச் செய்தோர்
       என்னை அடக்குதல் இன்னுமுண்டோ?       1

என்னுடைக் காடு என்னுடைப் பாடு
       என்றன்வெள் ளாமையை யார் அறுக்க?
மன்னவன் நானே மந்திரி என்ஆள்
       மற்றவர் யாரிதை ஒத்துக்கொள்ள!
சொன்னதைச் செய்த பண்ணையைக் காக்கச்
       சோற்றுக்கு வந்தவன் மாற்றியதேன்?
இன்னமும் இந்தச் சின்னத் தனத்தில்
       ஏங்கிக் கிடந்திடத் தூங்குவனோ!       2

என்னுடைப் பெட்டி என்னுடைத் துட்டு
       யாரிடம் சாவி இருத்தல்சரி?
பொன்னையும் வெள்ளிச் செம்புஎன் றாலும்
       பூட்டவும் நீட்டவும் என்பொறுப்பு;
சின்னப் பயலோ நான் சித்தம்கெட் டேனோ
       சீச்சீ! ஏன்இந்த ஏச்செனக்கு?
மன்னவன் நானே மந்திரி வைப்பேன்
       மற்றவர் யாருடைச் சித்தம்அது?       3

மந்திரி நானே மன்னவன் ஆவேன்
       மற்றவர் யாருக்குக் குற்றம்இதில்?
இந்திய நாட்டில் நொந்தவர் இன்றி
       இன்அர சாக்குவேன் என்னரசை!
அந்தமி லாதான் ஆண்டவன் தந்தான்
       ஆரிய நாடுஎன்றன் ஆட்சியன்றோ!
சிந்திய செல்வம் சேகரம் செய்து
       சீக்கிரம் பாக்கியம் ஆக்கிவைப்பேன்!       4

குறிப்புரை:- சித்தம் - அறிவு; நொந்தவர் - வருந்தியவர்;
அந்தமிலான் - முடிவு இலான்;மன்னவன் - அரசன்;
சீக்கிரம் - விரைந்து; பாக்கியம் - செல்வம்; மற்றவர் -அயலவர்.