புலவர் சிவ. கன்னியப்பன் 37

நேரெதும் நில்லா ஊக்கமுடன்
       நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன்
       பாடலும் தமிழன் தரும்புகழாம்.       8

கலைகள் யாவினும் வல்லவனாம்
       கற்றவர் எவர்க்கும் நல்லனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
       நின்றன இன்னும் உடையோனாம்.       9

சிற்பம் சித்திரம் சங்கீதம்
       சிறந்தவர் அவனினும் எங்கே சொல்?
வெற்பின் கருங்கல் களிமண் போல்
       வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.       10

உழவும் தொழிலும் இசைபாடும்
       உண்மை; சரித்திரம் அசைபோடும்;
இழவில் அழுந்திடும் பெண்கூட
       இசையோ டழுவது கண்கூடு.       11

யாழும் குழலும் நாதசுரம்
       யாவுள தண்ணுமை பேதமெலாம்
வாழும் கருவிகள் வகைபலவும்
       வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.       12

கொல்லா விரதம் பொய்யாமை
       கூடிய அறமே மெய்யாகும்;
எல்லாப் புகழும் இவை நல்கும்;
       என்றே தமிழன் புவிசொல்லும்.       13

மானம் பெரிதென உயிர்விடுவான்;
       மற்றவர்க் காகத் துயர்படுவான்;
தானம் வாங்கிடக் கூசிடுவான்;
       ‘தருவது மேல்‘ எனப் பேசிடுவான்.       14