376நாமக்கல் கவிஞர் பாடல்கள்

‘கொல்லுகின்றது இல்லையென்ற நல்லோர்கள்பேர்
       குவலயத்தில் வாழும்‘ என்று சங்கூதுவோம்!
‘வெல்லுகின்ற போதுமாசை விட்டார்களே
       வீரர்தீரர் சூரர்‘ என்று சங்கூதுவோம்!       8

‘ஆன்மசக்தி கண்டுகொண்ட அன்பாளரை
       அடிமையாக்க யாரும‘்இல்லை என்றூதுவோம்!
தான்மறந்(து) அகந்தைவிட்ட தக்காரையே
       தலைவணங்கும் உலகமென்று சங்கூதுவோம்!       9

சாந்திசாந்தி காந்தியென்று சங்கூதுவோம்!
       ‘சாத்திரங்கள் முடிவு‘இது என்று சங்கூதுவோம்!
காந்திகாந்தி காந்தியென்று நம்நாட்டிலே
       கால்நடக்கும் வேதம்என்று சங்கூதுவோம்!       10

குறிப்புரை:-‘தான்மறந்து அகந்தை விட்டதக்கார்‘ என்னும்
தொடரில், சித்தாந்தக் கருத்துபரிமளிப்பதைக் காணலாம்.
யான் என்ற அகங்காரமும் எனது என்ற மமங்காரமும் விட்ட
இடத்தில் இறைவன் குடிகொள்வான் என்பது கருத்து; ‘யான்
எனது என்று அற்ற இடமே திருவடியாம்‘ என்கின்றார் கந்தர்
கலிவெண்பாவில் குமரகுருபரர்; ‘யான் எனது என்னும் செருக்கு
அறுப்பான் வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்‘ என்கின்றார்
திருக்குறளில் திருவள்ளுவர்; வேதம் - மறை. சாந்திரங்கள் -
பதினான்கு. சாத்திரங்களின் முடிவு என்பதாகும். 1. திருஉத்தியார்,
2. திருக்களிற்றுப்படியார், 3. சிவஞானபோதம், 4. சிவஞான சித்தியார்,
5. இருபா இருபது, 6. உண்மை விளக்கம், 7. சிவப்பிரகாசம்,
8. திருவருட் பயன், 9. வினாவெண்பா, 10. போற்றிப்பஃறொடை,
11. கொடிக்கவி, 12. நெஞ்சுவிடு தூது, 13. உண்மை நெறி விளக்கம்,
14. சங்கற்ப நிராகரணம்.

233. சங்கொலி

சங்கொலி எழுந்தது சங்கடம் அழிந்தது
தைரியம் கொள்வாய் தமிழ் மகனே!       1

கங்குலும் கழிந்திடும் கதிரொளி பொழிந்திடும்
கவலையெ லாம்விடு தமிழ்மகனே!       2