புலவர் சிவ. கன்னியப்பன் 377

கூரிருள் மறைந்திடும் குளிர்வது குறைந்திடும்
குறுகிப் படுத்திடல் இனிவேண்டா!       3

பேரருள் சுரந்திடும் பெருவழி திறந்திடும்
பேதமை விடுவாய் தமிழ்மகனே!       4

திருட்டுகள் நீங்கிடும் தீயன நடுங்கிடும்
தீனர்க்கு அபயக்குரல் சங்கோசை!       5

இருட்டினில் செய்திடும் யாவையும் மறைந்திடும்
எழுந்து கடன்முடி தமிழ்மகனே!       6

சூதரும் குடியரும் சுருக்கெனப் பயப்படும்
சுதந்தரச் சங்கொலி கேட்குதடா!       7

வேதமும் கலைகளும் வித்தைகள் விளங்கிட
விடிந்திடும் சஞ்சலம் விட்டிடுவாய்!       8

மங்களச் சங்கொலி மகிழ்தரக் கேட்குது
மயக்கவிட்(டு) எழுந்துஇனி மறைபாடு!       9

எங்ஙணும் யாவினும் இருந்தருள் கடவுளும்
இருக்குது பயமிலை எழுந்திரடா!       10

குறிப்புரை:-தீனர் - யாசிப்பவர், இரப்போர். ‘இரந்து உயிர்
வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக இவ்வுலகு இயற்றியான்‘
என்று வள்ளுவப் பெருந்தகையார் கூறிப் போந்துள்ளார்.
‘தனியொருவனுக்கு உணவிலை எனில் சகத்தினை அழித்திடுவோம்
என்கின்றார் பாரதியார்; சூதர் - சூதாடுவார்; வித்தை - கல்வி;
கூரிருள் - செறிந்த இருள்.

234. இணையிலாக் கொடி

இந்திய நாட்டில் இணையிலாக் கொடியே
       இலங்குவாய் என்றும் வயங்கொலி பரப்பி
தந்திரம் மோசம் தன்னலம் கருதா
       சத்தியம் நிறைந்த உத்தம வாழ்வின்