உயிருள்ளஉடலங்கள் எல்லாம் - ஈசன் உறைவுஎன்று பணிகின்ற நல்லோன் துயருற்ற எவருக்கும் துணையாம் - காந்தி தொடர்புஇன்றி எதுவாழ்வின் புணையாம். 3 வையத்தை வாழ்விக்க வந்தான் - மக்கள் வானத்தின் சக்திபெறத் தந்தான் தெய்வத்தின் பெயர்தியாக ராசன் - என்று தெரிவிக்க உயிர்தந்த நேசன். 4 பகவானைத்தரிசிக்க என்று - நாமும் பலவான ஊர்தேடிச் சென்று மிகவாக வாடுதல் வேண்டாம் - காந்தி மெய்வாழ்வு பாடுதல் பூண்டால். 5 தானங்கள்வெவ்வேறு செய்து - நல்ல தவமென்றே ஆகுதி பெய்து மோனங்கள் தருகின்ற யாவும் - காந்தி முறைதந்த வழிவாழ மேவும். 6 குறிப்புரை:-இணையற்ற - ஒப்பில்லாத; மெய்ஞ்ஞானம் - உண்மை அறிவு; பகவான் -இறைவன்; வாடுதல் - தளர்வுறுதல்; ஆகுதி - வேள்வி; வையம் - உலகம். 240. கடவுளைக் காட்டும்காந்தி ஒப்புடன் ‘உண்மைக் காக உயிர்தர வேண்டும்என்றே எப்படி விரும்பி‘னாரோ அப்படி இறந்தார்காந்தி. இப்படி உயிரை ஈந்தோர் உலகினில் எவரும்இல்லை தப்புற நினைக்க வேண்டாம் தர்க்கமும் தருமம்அல்ல. 1 |