386நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கூச்சம் அற்ற பக்தியும்
       குணந லத்தின் சக்தியும்
தேர்ச்சி கொள்ளும் கருணையே
       காந்தி வாழ்ந்த அருள்நெறி.       3

வீரம் பேசும் வெறியரும்
       வெற்றி நாடும் குறியரும்
ஈரம் அற்ற நெஞ்சரும்
       இழிவு கற்ற வஞ்சரும்
ஓரம் சொல்லு வோர்களும்
       உண்மை அஞ்சும் பேர்களும்
தூரம் ஓடக் காய்ந்திடும்
       தூய்மை சோதி காந்தியாம்!       4

குறிப்புரை:-ஐயன் - தலைவன்; மோனம் - மௌனம்;
ஓரம் - ஒரு பக்கம்.

242. இணையிலாஎம்மான் காந்தி

பிறப்பினும் பெரியவர்பெம்மான் காந்தி
இறப்பிலும் இணையிலர் எம்மான் காந்தி
துறப்பிலும் நிகரிலர் தூயோன் காந்தி
மறப்பதும் நமக்கது மாபெரும் பாவம்.       1

அறிவினில்ஆழியன் அரும்பெரும் காந்தி
நிறைகுண நலங்களில் நேரிலன் காந்தி
குறிசொலும் அனுபவக் குன்றாம் காந்தி
நெறிதரக் காந்தியின் நேர்எவர் உலகில்.       2

மேழியின்சிறப்பினை மீட்டவர் காந்தி
ஏழையின் பெருந்துணை எமதரும் காந்தி
கோழையும் திடம்பெறக் கொடுத்தவர் காந்தி
வாழிய காந்தியின் வழிகொடு வாழ்வோம்.       3