சூரியன்இறப்பான்; காணும் சந்திரன் சூன்ய மாவான்; பாரொடு விண்ணில் மின்னப் பார்க்கிற யாவும் மாயும். நேரிய அறிவு கூறும் தெய்விக மெய்மை காட்ட நேரிய காந்தி ஞானம் நிரந்தரம் நிலைத்து வாழும். 6 குறிப்புரை:-ஏம்பல் - ஏக்கம் அடைதல், கலங்கல், வருத்தம். 241.தூய்மை சோதி நீறு பூசு வோர்களும் நெற்றி நாமப் பேர்களும் வேறு பொட்டு சந்தனம் வேண்டு கின்ற மைந்தரும் கூறும் சின்னம் இன்றியும் கொள்கை யோடு நின்றிடும் மாறு கொள்ளும் யாவரும் மகிழும் காந்தி தேவராம். 1 அமிழ்தம்ஒத்த அறிவினில் அழிவி லாத நெறிதரும் தமிழ்அ றிந்த சத்தியம் காந்தி வாழ்ந்த தத்துவம் தமைய றிந்த முனிவரும் தம்ம டங்கும் அனைவரும் அமைதி தேடும் சாந்தியே ஐயன் எங்கள் காந்தியாம். 2 மூச்சுஅடக்கும் யோகமும் முறைபு ரிந்த யாகமும், பேச்சுஅ டக்கும் மோனமும் பேசும் தர்க்க ஞானமும், 13நா.க.பா. பூ.வெ. எ. 489 |